சரியாக பணியாற்றாத ஐபிஎஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! - மத்திய அரசு அதிரடி

சரியாக பணியாற்றாத ஐபிஎஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! - மத்திய அரசு அதிரடி
சரியாக பணியாற்றாத ஐபிஎஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! - மத்திய அரசு அதிரடி
Published on

சத்தீஸ்கார் மாநிலத்தில் சரியாக பணியாற்றாத 2 போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

சத்தீஸ்கார் மாநில காவல்துறையில் கடந்த 1983-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஏ.எம்.ஜுரி, பின்னர் 2000-ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டர். இதைப்போல 1985-ம் ஆண்டு பணியில் சேர்ந்த கே.சி.அக்ரவால் 2002-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். இருவரும் மாநில காவல்துறையில் டி.ஐ.ஜி. நிலையில் பணியாற்றி வந்தனர். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறன் குறித்து 15 ஆண்டுக்குப்பின் ஒரு முறை, 25 ஆண்டுக்குப்பின் ஒருமுறை என 2 முறை மறு ஆய்வு மேற்கொள்ளப்படும். ஏ.எம்.ஜுரி, கே.சி.அக்ரவால் இருவரும் ஐ.பி.எஸ். அதிகாரியாக 15 ஆண்டு பணிக்காலத்தை முடித்துள்ள நிலையில், அவர்களின் பணித்திறன் குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது இரு அதிகாரிகளின் பணித்திறனில் மாநில அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை. அவர்கள் தங்கள் பணியை தொடர தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டது. எனவே, சரியாக பணியாற்றாத அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்யுமாறு மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சர் அவையின் நியமனக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் அந்த 2 அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய முடிவு செய்து, அது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஏ.எம்.ஜுரி, கே.சி.அக்ரவால் ஆகியோரை பணிநீக்கம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன் மூலம் அவர்கள் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இது சத்தீஸ்கார் மாநில போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com