சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு டெல்லி கீழமை நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியது
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் டூல் கிட் என்ற பெயரில் செயல் திட்ட ஆவணத்தை உருவாக்கி அதை சர்வதேச பிரபலங்களுடன் பகிர்ந்ததாக சுற்றுச்ச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். தேச துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டிருந்த அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்தவழக்கு 20ம் தேதி விசாரணைக்கு வந்த போது திஷாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என டெல்லி காவல்துறை கடுமையாக வாதிட்டது. இந்நிலையில் இன்று டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு டெல்லி கீழமை நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியது