ராணுவத்தில் பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே ராணுவ அதிகாரிகள் மத்தியில் பிரச்னை எழுந்துள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறியுள்ளனர். சண்டையிடும் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கே பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மற்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.