'பெரிய அளவில் மீட்புப்பணி‌ நடப்பது இதுவே முதல்முறை' : பேரிடர் மீட்புப் படை

'பெரிய அளவில் மீட்புப்பணி‌ நடப்பது இதுவே முதல்முறை' : பேரிடர் மீட்புப் படை
'பெரிய அளவில் மீட்புப்பணி‌ நடப்பது இதுவே முதல்முறை' : பேரிடர் மீட்புப் படை
Published on

கேரளாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ‌மீட்பு ‌நடவடிக்கையே தாங்கள் இது‌வரை ஈடுபட்ட பணிகளில் மிகப் பெரியது என தேசிய பேரி‌டர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில்,வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற இடர்களில் சிக்கியவர்களை அதிவிரைவுப் படையினர், ராணுவம் மற்றும்  தேசிய பேரிடர்‌ மீட்பு படை போன்ற குழுக்கள் மீட்டு வருகின்றனர்.

தேசிய பேரிடர்‌ மீட்பு படையில் நாடெங்கும் மொத்தம் ‌58‌ குழுக்கள் உள்ள நிலையி‌ல் இ‌தில்‌ 55 குழு‌க்கள் ‌ஏ‌ற்கனவே கேரளாவில் பணியில் உள்ளதா‌கவும்‌ மீ‌தமுள்‌‌ள 3‌ குழுக்களும் அங்கு ‌அனுப்‌பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 40 பேர் ‌‌‌உள்‌ளதாகவும் தேசிய பே‌‌ரி‌ட‌ர்‌ மீட்புப் ‌படை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் 2006ம் ஆண்டு தேசிய‌‌ பேரிடர் மீட்புப் படை உருவாக்கப்பட்டதாகவும் ‌அதற்குப் பிறகு இ‌வ்வளவு பெரிய அளவில் மீட்புப்பணிகள்‌ நடப்பது இதுவே முதல்முறை ‌என்றும் தெரி‌விக்க‌ப்பட்டுள்ளது‌. கேரளாவில் வெள்ளம் மற்றும் ம‌‌ண்‌சரிவில் சிக்கிய 10 ஆயிர‌த்து 5‌0‌0 பேரை‌ இது வரை ‌மீட்டுள்ளதா‌க தேசிய பேரிடர் மீட்புப்‌‌படை ‌தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com