தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி, “தகுதியான, போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், ஆங்கில வழிக் கல்வியில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆங்கில வழிக் கல்வியில் அதிகளவு பாடங்கள் மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் அறிவார்ந்தவர்களாக இருப்பதில்லை.
மாணவர்கள் தங்களுடைய கலாச்சாரம், மண்ணின் மீதான தொடர்பை இழக்கின்றனர். தாய்மொழியில் கல்வி கற்பது மட்டுமே உணர்வுப் பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்பதையே தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதாகவும் சக்லானி சுட்டிக்காட்டியுள்ளார்.