திலீப் கைது எபெக்ட்: செய்தி சேனல் பார்வையாளர்கள் எண்ணிக்கை திடீர் உயர்வு

திலீப் கைது எபெக்ட்: செய்தி சேனல் பார்வையாளர்கள் எண்ணிக்கை திடீர் உயர்வு
திலீப் கைது எபெக்ட்: செய்தி சேனல் பார்வையாளர்கள் எண்ணிக்கை திடீர் உயர்வு
Published on

நடிகை பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டதை அடுத்து கேரள செய்தி சேனல்களின் பார்வையாளர் எண்ணிக்கை 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தும் BARC அமைப்பு இதை தெரிவித்துள்ளது.

சீரியல் மற்றும் என்டர்டெயின்ட்மென்ட் விஷயங்களை மட்டும் அதிகமாகப் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரும் செய்தி சேனல் பக்கம் தாவியதால் இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானதை அடுத்து அது தொடர்பாக பரபரப்பான சூழ்நிலை கேரள சினிமாவில் ஏற்பட்டது. இது தொடர்பாக பல்சர் சுனிலின் கடிதம், திலீப் மறுப்பு, போலீஸ் விசாரணை, காவ்யா மாதவன் கடையில் சோதனை என தினமும் அது தொடர்பாக செய்திகள் பரபரப்பைக் கிளப்பியதால் மக்கள், மற்ற விஷயங்களை விட்டுவிட்டு செய்தி சேனல்களை அதிகமாகப் பார்த்துள்ளனர். திலீப் கைது செய்யப்பட்ட பின் தான் இந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

’நடிகை பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கு சாதாரண விஷயமில்லை. பெரிய குற்றச் செய்தி. இதில் திலீப் கைதானது மட்டுமல்லாமல் சினிமா இண்டஸ்ட்ரியில் பெண்களின் பாதுகாப்பே விவாதத்துக்குரியதாக மாறிவிட்டது. அதனால்தான் திலீப் கைது விவகாரத்தில், பார்வையாளர்கள் அதிகரித்ததற்கு காரணம்’ என்கிறார் ஏசியாநெட் சேனலின் ஆசிரியர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன்.

‘மக்கள் அப்படியே செய்தி சேனலுக்கு திரும்பி விட்டார்கள் என்று இதை சொல்ல முடியாது. செய்தி சேனல்களுக்கு புதிய பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார் முன்னாள் எம்.பி செபாஸ்டியன் பால்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com