தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 10-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சூடுபிடிக்கும் 5 மாநில தேர்தல்கள்... வெற்றி நிச்சயம் எனக்கூறும் பிரதமர்... மக்கள் யார் பக்கம்?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.
வெற்றி நிச்சியம்தான். அது தேர்தல் முடிவு காங்கிரஸ்-க்கா, AAP-க்கா, பிஜேபி-யா அல்லது மாநில கட்சிகளா என்று தெரியும்..
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..
ஹிஜாப் விவகாரம் பிஜேபிக்கு பின்னடைவு..
வலிமையான தலைமை இன்றி காங்கிரஸ்..
மாநில நலன் சார்ந்து மக்கள் தீர்ப்பு.
Farook Nagore
மக்களை மடைமாற்றும் மத அரசியலை விடுத்து மனிதம் போற்றும் மக்கள் பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்!!