`முகக்கவசம் அணிய மறுப்போரை விமானத்திலிருந்து இறக்கிவிடலாம்'- மாஸ்க்கை கட்டாயமாக்கியது DGCA

`முகக்கவசம் அணிய மறுப்போரை விமானத்திலிருந்து இறக்கிவிடலாம்'- மாஸ்க்கை கட்டாயமாக்கியது DGCA
`முகக்கவசம் அணிய மறுப்போரை விமானத்திலிருந்து இறக்கிவிடலாம்'- மாஸ்க்கை கட்டாயமாக்கியது DGCA
Published on

விமானத்தில் பயணம் செய்யும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், முகக் கவசம் அணியவில்லை என்றால் விமானத்தில் அந்தப் பயணி ஏற்றப்பட மாட்டார் எனவும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர் சமீபத்தில் விமான பயணம் மேற்கொண்ட போது, விமானத்தில் கொரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து புகார் எழுப்பினார். இதைத்தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்தது.

அப்போது விமானத்தில் முககவசம் அணியாதவர்கள் "நோ பிளை லிஸ்ட்" (No Fly List) என அழைக்கப்படும் விமான பயணம் மேற்கொள்வதற்கான தடை விதிக்கப்பட்ட நபர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டனர். மேலும் முகக்கவசம் அணிய மறுத்தால் அவர்களை விமானத்தில் ஏற்ற மறுக்கலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தனர்.

இதனடிப்படையில் விமான போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையம் தற்போது முக்கிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் விமானத்திலும், விமான நிலையங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மேலும் ஒரு பயணி விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்தால், விமானம் புறப்படுவதற்கு முன்பே அந்த பயணியை விமானத்தில் இருந்து இறக்கி விடலாம் எனவும் அல்லது விமானம் புறப்பட்ட பின்னர் பயணம் செய்யும்போது, குறிப்பிட்ட பயணி முககவசம் அணிய மறுத்தால் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அவர்களின் பெயரையும் சேர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">In line with Delhi HC order, aviation regulator DGCA issues new Covid norms for airports, aircraft making masks mandatory throughout the journey, and permits mask removal only under exceptional circumstances. Violators may be treated as &#39;unruly passengers&#39;.</p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1534491764718903297?ref_src=twsrc%5Etfw">June 8, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகள் முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அப்படி முகக்கவசம் அணிய வில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரிய அதிகாரிகளிடம் பயணி ஒப்படைக்கலாம் எனவும் உத்தரவில் விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com