சரண கோஷத்துடன் சபரிமலையில் குவியும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 60 நாட்கள் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான நடை கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. பொதுவாக டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குப் பின்புதான் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜை தொடங்கிய முதல் நாளே பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை சுமார் ஒரு லட்சத்து 61,789 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 37,848 பக்தர்கள் விர்ச்சுவல் கியூவில் முன்பதிவு வாயிலாகவும், இதர பக்தர்கள் புல்லுமேடு, எருமேலி உள்ளிட்ட வனப்பாதை வழியாகவும் தரிசனத்திற்கு சென்றுள்ளனர்.
பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர தேவசம் போர்டு மற்றும் அரசுத் துறைகள் சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளன.