கொரோனா பாதிப்பு எதிரொலி : சபரிமலையில் மார்ச் 14 முதல் 18 வரை பக்தர்களுக்கு தடை

கொரோனா பாதிப்பு எதிரொலி : சபரிமலையில் மார்ச் 14 முதல் 18 வரை பக்தர்களுக்கு தடை
கொரோனா பாதிப்பு எதிரொலி : சபரிமலையில் மார்ச் 14 முதல் 18 வரை பக்தர்களுக்கு தடை
Published on

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வருகின்ற மார்ச் 14ஆம் தேதி முதல் சபரிமலைக் கோயிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

கேரளாவில் 3 வயது குழந்தை உட்பட மொத்தம் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கேரள அரசு முன்னர் தெரிவித்தது. இந்நிலையில் அவர்களை தவிர்த்து மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.

அதன்படி, கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சபரிமலையில் மார்ச் 14-18 வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், சபரிமலை கோயிலில் மாத பூஜை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவும் அச்சம் உள்ளதால் மக்கள் ஒன்றாக அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, கொரோனா அச்சம் காரணமாக கேரளாவில் உள்ள திரையங்குகளை மார்ச் 31ஆம் தேதி வரை மூட அம்மாநில திரையுலக சங்கங்கள் முடிவு செய்துள்ளன. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், அங்கும் பறவைக் காய்ச்சலின் தாக்கமும் ஆரம்பித்துள்ளது. இதனால், அம்மாநிலம் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com