திருப்பதி மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டத்தால் ஏற்படும் விபத்துகள் மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு 60 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவச்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: துபாய் டூ தெலங்கானா: விமானத்தில் கடத்திவரப்பட்ட 1.4 கிலோ தங்கம் பறிமுதல் - 2 பெண்கள் கைது