இந்தியாவில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு 1 அரசு மருத்துவர் மட்டுமே இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதார புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 581 ஆக இருந்ததாகவும், 2018 ஆம் ஆண்டு 41 ஆயிரத்து 371 ஆக குறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள மக்கள் தொகையின்படி, 10 ஆயிரத்து 926 பேருக்கு 1 அரசு மருத்துவர் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது.
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.28 சதவிகிதத்தை மட்டுமே செலவிடுகிறது. 2009 - 10 ஆண்டுகளில் 621 ரூபாயாக இருந்த தனிநபருக்கான பொதுச் சுகாதாரச் செலவு, 2017- 18 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்து 675 ரூபாயாகவே உயர்ந்துள்ளது. இது சுகாதாரத் துறையை மேம்படுத்த அதிக நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதை காட்டுகிறது.