மீண்டும் தவறாக பாடப்பட்டதா தமிழ்த்தாய் வாழ்த்து? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்த விவகாரத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்முகநூல்
Published on

சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகளை விடுத்து மற்ற வரிகள் பாடப்பட்டன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையான விவகாரமாக உருவெடுத்தது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ வரி புறக்கணிப்பு | மன்னிப்பு கேட்டது டிடி தமிழ்!

இந்நிலையில், இன்று (25.10.2024) காலை சென்னை தலைமை செயலகத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில்,'திட்டங்கள் வளர்ச்சித் துறையின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வுக் கூட்டம்' நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது..அப்போது பாடல்களில் சில வரிகள் தவறாகவும் முழுமை பெறாமாலும் பாடப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்தநிலையில், “அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடப்படவில்லை” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வேலூர்: ஓடிக்கொண்டிருந்த ரயிலில் தனியாக கழன்று சென்ற இன்ஜின்... இன்ஜினை மாற்றி ரயில் அனுப்பிவைப்பு!

இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களிடையே பேசிய அவர், "இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்ற 19 நபர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தில் அடுத்துப் பயன்பெறப்போகும் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை. அது தொழில்நுட்ப கோளாறுதான். பாடியவரின் மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதன் காரணமாக அவரது குரல் சரியாக கேட்கவில்லை. ஆகவே, மறுபடியும் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடப்பட்டது. இதனையடுத்து, தேசிய கீதமும் ஒழுங்காக பாடப்பட்டது. தேவையில்லாமல், மீண்டும் ஒரு பிரச்னையை கிளப்பி விடாதீர்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com