கணக்கில் வராத பணம் மூலம் ரூ.6000 கோடி வசூல்

கணக்கில் வராத பணம் மூலம் ரூ.6000 கோடி வசூல்
கணக்கில் வராத பணம் மூலம் ரூ.6000 கோடி வசூல்
Published on

கணக்கில் வராமல் வங்கிகளில் செலுத்தப்பட்ட பணத்திற்கு இதுவரை ரூ 6,000 கோடி வசூல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல் படுத்தப்பட்ட பிறகு, கருப்பு பணம் வைத்திருந்த பலர் தங்கள் வங்கி கணக்கிலோ அல்லது பினாமிகளின் பெயர்களிலோ அந்த பணத்தை டெப்பாசிட் செய்தனர். இதானல் பலரின் வங்கிக் கணக்குகளில் பணம் கிடுகிடுவென உயர்ந்தது. ஜன்தன் கணக்குகளில் கூட பணம் அதிக அளவில் டெப்பாசிட் செய்யப்பட்டது.

இதில் சந்தேகத்தின் பெயரில் பலரது வங்கிக் கணக்கு ஆய்வு செய்யப்பட்டு, கணக்கில் வராத பணத்திற்கு வரி வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ 6,000 கோடி கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபோல ரூ 50 லட்சத்திற்கும் மேல் தனது வங்கி கணக்கில் செலுத்திய 1092 பேரிடம் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை எனவும் அவர்களையும் கணக்கில் சேர்த்தால் வரி வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் கறுப்பு பணத்திற்கான சிறப்பு புலனாய்வு குழுத் துணைத் தலைவர் நீதிபதி அரிஜித் பசாயத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com