“ரூ.500, ரூ2000 நோட்டுகள் அச்சிட்ட தேதிகள் வெளியிடுக” - மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

“ரூ.500, ரூ2000 நோட்டுகள் அச்சிட்ட தேதிகள் வெளியிடுக” - மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
“ரூ.500, ரூ2000 நோட்டுகள் அச்சிட்ட தேதிகள் வெளியிடுக” - மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
Published on

புதிய இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் அச்சிட்ட தேதியை வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாரதிய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டு அச்சிடும் நிறுவனத்திடம் புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் எப்போது அச்சிடப்பட்டன. 2016 நவம்பர் 9 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை எவ்வளவு புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டன உள்ளிட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹரீத்தர் திங்ரா என்பவர் கோரியிருந்தார். 

இது தொடர்பான விவரத்தை அந்நிறுவனம் தெரிவிக்க மறுத்த நிலையில், நாட்டின் பொருளாதாரம் சார்ந்த முக்கிய விஷயம் என்றும் எந்த வகையான காகிதம், மை பயன்படுத்தப்படுகிறது உள்ளிட்டவை மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை எனத் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த மத்திய தகவல் ஆணையம், புதிய நோட்டுகள் எந்த தேதி அச்சிடப்பட்டன, அதன் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை வெளியிடுவதால் எந்த பிரச்னையும் இல்லை எனக் கூறி மனுதாரர் கேட்ட விவரங்களை வெளியிட உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com