2 முறை டேப்லெட் ஆர்டர்! பணம் பறித்ததா அமேசான்?.. ஏமாற்றமடைந்ததாக பெண் போட்ட எச்சரிக்கை பதிவு!

அமேசான் நிறுவனத்தின் மூலம் ஏமாற்றப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமேசான்
அமேசான்எக்ஸ் தளம்
Published on

ஆன்லைன் வணிகம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், அதே வியாபாரம் மூலமாக பல மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் நுகர்வோர்கள் ஆர்டர் செய்த பொருட்களுக்குப் பதில் வேறு சில பொருட்கள் அனுப்பப்பட்டு அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இன்னும் சில இடங்களில் விஷமிக்க உயிரினங்கள்கூட அனுப்பப்பட்டதாக செய்திகள் இணையத்தில் வைரலாகின. இந்த நிலையில், அமேசான் நிறுவனத்தின் (ஆன்லைன் வணிகத்தில் முதன்மையான நிறுவனம்) மூலம் ஏமாற்றப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்தவர் ஸ்வாதி சிங்கால். இவர் தனது முகநூல் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, அவர் அமேசான் மூலமாக ஒரேநாளில் ஒரேமாதிரியான இரண்டு ஆர்டர்களை செய்துள்ளார். அவை இரண்டுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தியுள்ளார். ஒரு ஆர்டர்க்கு பணத்தை நேரிடையாகவும் மற்றொரு ஆர்டருக்கு ஆன்லைன் பேமெண்ட் மூலம் பணம் செலுத்தியுள்ளார். இதில், முதலில் செய்த டேப்லெட் ஆர்டருக்குப் பதிலாக போலி ஸ்பீக்கர்கள் வந்துள்ளன. அதேநேரத்தில், இரண்டாவது தடவையாக செய்த ஆர்டருக்கு உண்மையான டேப்லெட் வந்துள்ளது. இதனால் அதிர்ந்துபோன அவர், தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அமேசான் வாடிக்கையாளர் சேவை மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இது மோசடி நடவடிக்கைக்கு வழிவகுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எதிராளியை விரட்ட செஸ் போர்டில் விஷம் தெளிப்பு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி! சிக்கலில் வீராங்கனை #Video

அமேசான்
இதுவா ஸ்மார்ட்போன் ? - அமேசான் டெலிவரியால் அதிர்ந்துபோன பாஜக எம்.பி

இதுகுறித்து அவர், “அமேசானை நம்பியிருக்கும் அனைவருக்கும் இந்த செய்தி, அமேசான் எவ்வாறு மக்களை ஏமாற்றுகிறது என்பதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்களை ஏமாற்றுவதற்காக தரவு பின்முனையில் சமரசம் செய்யப்படுகிறது. ஒரேநாளில் இரண்டு முறை ஆர்டர்களைப் பெற்றேன். அதில் ஒன்றுக்கு ரெடி கேஷாகவும் மற்றொன்றுக்கு ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்தினேன்.

இரண்டு ஆர்டர் சீட்டுகளும் ஒரேமாதிரியாக இருந்தன. என்றாலும், முதல் ஆர்டரில் டேப்லெட்டுக்குப் பதிலாக போலி ஸ்பீக்கர்கள் கிடைத்தன. இரண்டாவது சரியான ஆர்டர். ஆனால் நாங்கள் இரண்டு முறை பணம் செலுத்தினோம். அமேசானில் இருந்து ஆர்டரைப் பற்றிய தகவல்கள் கசிந்தன. ஆனால் போலியானவை. நீங்கள் அதிக விலைக்கு வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை பதிவிற்குப் பிறகு பதிலளித்த அமேசான் நிறுவனம் அவருக்கு அசல் ஆர்டரை வழங்குவதாக உறுதியளித்தது. ஆனால், அதற்கு தனியாக பணம் செலுத்துமாறு ஸ்வாதி சிங்காலிடம் கோரியுள்ளது. அவர் ஏற்கனவே பணம் செலுத்தியதாக கூறியதை அடுத்து, ​​அந்தப் பணம் எங்கு சென்றது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என நிறுவனம் கூறியதாகவும், ஸ்வாதி சிங்கால் தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பணத்தைத் திரும்பப் பெறும் நோக்கில் இருக்கும் ஸ்வாதிக்கு, அமேசான் மீண்டும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முகநூல் பக்கத்தில் ஸ்வாதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: உடலுறவுக்கு கட்டணம் வசூலித்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவர்.. நிராகரித்த உயர்நீதிமன்றம்!

அமேசான்
கர்நாடகா: கேம் டிவைஸ் ஆர்டர் செய்த பெண் - அமேசான் பார்சலில் வந்த பாம்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com