யமுனை ஆற்றை மூடிய நச்சு நுரை படலம்.. காரணம் என்ன?

யமுனை ஆற்றை மூடிய நச்சு நுரை படலம்.. காரணம் என்ன?
யமுனை ஆற்றை மூடிய நச்சு நுரை படலம்.. காரணம் என்ன?
Published on

யமுனை ஆற்றில் ஆலைகளின் வேதி கழிவுகள் கலப்பதால் நுரை பொங்கி காற்றில் பறந்து வருகிறது.

வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு, இமயமலையில் உற்பத்தியாகி, டெல்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடி, உத்தரப்பிரதேசம் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. இந்நிலையில், ரசாயனக் கழிவு கலப்பு காரணமாக டெல்லியின் முக்கிய நீர் ஆதாரமான யமுனை ஆறு அதிகளவில் மாசடைந்துள்ளது.

இதனால், யமுனை ஆற்றில் மலை போல் நுரை பொங்கி எழுகிறது. தொழிற்சாலைகளின் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் யமுனை ஆற்றில் கலப்பதால், பாஸ்பரஸ் அளவு பல மடங்கு அதிகரித்து நுரை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com