டெல்லியில் ஜனநாயக கடமையாற்றிய 111 வயது முதியவர்

டெல்லியில் ஜனநாயக கடமையாற்றிய 111 வயது முதியவர்
டெல்லியில் ஜனநாயக கடமையாற்றிய 111 வயது முதியவர்
Published on

டெல்லியில் 111 வயது வாக்காளரான பச்சன் சிங் இன்று தனது வாக்கினை செலுத்தினார்.  

கடந்த 1951ம் ஆண்டில் இருந்து எந்த தேர்தலையும் தவறவிடாத பச்சன், கடந்த தேர்தலின்பொழுது சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து சென்றார்.

அதேபோல் இந்த முறையும் வாக்களித்துள்ளார். தேர்தல் அதிகாரிகளுடன் காரில் வந்து இறங்கிய பச்சன் சக்கர நாற்காலியில் வாக்கு மையத்திற்குள் சென்றார்.  இவர் சாந்த்கார் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் முடக்குவாதம் ஏற்பட்டதால் அவரால் தெளிவாக பேச முடிவதில்லை. ஆனால் சுயநினைவுடன் செயல்படுகிறார்.

வாக்கு செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்களுக்காக பணி செய்பவர்களுக்கு நான் வாக்களித்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து பேசிய அவரது மகன் ஜஸ்பீர் சிங், பச்சன் சிங்கிற்கு ஆம் ஆத்மி என்ற கட்சி இருப்பதும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தான் என்பதும் கூட தெரியாது என குறிப்பிட்டார்.

மேலும் அவர் எப்போதும் பாஜகவிற்கும் காங்கிரசிற்கும் தான் போட்டி என்று நினைத்து கொண்டிருப்பதாகவும் 1951 ஆம் ஆண்டில் இருந்து அவர் எந்த தேர்தலையும் புறக்கணித்தது இல்லை எனவும் தெரிவித்தார். சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு யாருடைய உதவியும் தேவைப்படவில்லை. அவரே தனியாக சமைத்துக் கொள்வார் என அவரது மகன் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com