ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் காற்றுமாசு.. திணறும் டெல்லி மக்கள்..!

ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் காற்றுமாசு.. திணறும் டெல்லி மக்கள்..!
ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் காற்றுமாசு.. திணறும் டெல்லி மக்கள்..!
Published on

டெல்லியில் வசிக்கும் மக்கள், நச்சுக்கள் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். காற்று மாசுபாட்டால், கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மாசுகள் கலந்த நச்சுக்காற்றில் சிக்கித் திணறும் தலைநகரில் காற்று மாசின் அளவு அக்டோபர் மாதத்தின் முதல் இரு வாரங்களில்,
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் இதே காலகட்டத்தைவிட காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காலகட்டத்தில், மாசு கலந்த காற்றின் காரணமாக சுவாசிப்பதில் மிகுந்த சிரமங்களை டெல்லி மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஏற்கெனவே நோயுற்றவர்கள் நச்சுக்காற்றால் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் நோய் உள்ளவர்களுக்கு தரம் குறைந்த காற்றால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். டெல்லியில் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்திற்கு பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் அறுவடை செய்ய நிலங்களை எரியூட்டுவது முக்கிய காரணமாக இருக்கிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர் ரூபேஸ் குப்தா, வயது 45. ஆஸ்த்மா நோயாளியான அவர், சிகிச்சைக்குப் பிறகு மாசுபட்ட காற்றை சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். "என்னால் நடக்கவோ, வீட்டை விட்டு வெளியே போகவோ முடியவில்லை. நான் வீட்டை விட்டு வெளியேறினால், சுவாசிப்பதற்கு ரொம்பவும் சிரமமாக இருக்கிறது" என்கிறார்.

மக்கள் கூட்டத்தால் நிறைந்துள்ள டெல்லி நகரில் நச்சுக் கலந்த காற்று தூய்மை அடைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com