டெல்லி: புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற அதிஷி; முதலமைச்சர் நாற்காலியில் அமரவில்லை! ஏன்?

டெல்லியின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அதிஷி முதலமைச்சர் நாற்காலியில் அமராமல் அருகே மற்றொரு இருக்கை போட்டு அமர்ந்தார்.
டெல்லி புதிய முதல்வராக அதிஷி
டெல்லி புதிய முதல்வராக அதிஷி முகநூல்
Published on

டெல்லியின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அதிஷி முதலமைச்சர் நாற்காலியில் அமராமல் அருகே மற்றொரு இருக்கை போட்டு அமர்ந்தார்.

கடந்த 21ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி முதலமைச்சராக அதிஷி பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து புதிய முதலமைச்சராக அதிஷி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது முதலமைச்சர் நாற்காலியில் அமராமல் அதன் அருகே மற்றொரு இருக்கை போட்டு அமர்ந்தார்.

டெல்லி முதல்வராக அதிஷி
டெல்லி முதல்வராக அதிஷி

ராமர் 14 வருடங்கள் வனவாசம் சென்று போது பரதன் அடைந்த அதே வலிதான் இன்று தனக்கும் உள்ளதாக அதிஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்லி புதிய முதல்வராக அதிஷி
டெல்லி | சிவில் சர்வீஸுக்குப் படித்த ராஜஸ்தான் மாணவர்! 10 நாட்கள் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்பு!

மேலும் “பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் பல புதிய விஷயங்களை நிகழ்த்தியுள்ளார். அந்தவகையில், ‘டெல்லி மக்கள் என்னை நேர்மையாகக் கருதும் வரை மீண்டும் நாற்காலியில் அமரமாட்டேன்’ என்றார். தேர்தல் நெருங்கிவிட்டது. அவரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதுவரை இந்த நாற்காலி அவருக்காக காத்திருக்கும்” என்றார்.

டெல்லி முதல்வராக அதிஷி
டெல்லி முதல்வராக அதிஷி

முதலமைச்சர் நாற்காலியில் அமராமல் அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டதை பாஜக "நாற்காலி நாடகம்" என்று விமர்சித்து உள்ளது. அதிஷி உடன் அமைச்சர்களாக சவுரவ் பரத்வாஜ், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், முகேஷ் அஹ்லாவத் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com