“டெல்லிக்கு வரும் டீசல் பேருந்துகளை கட்டுப்படுத்த வேண்டும்” - 3 மாநிலங்களுக்கு டெல்லி அரசு கடிதம்

டெல்லி காற்று மாசு அதிகரித்து காணப்படுவதால் ஹரியானா, உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுக்கு டெல்லி அமைச்சர் கோபால் ராய் கடிதம் எழுதியுள்ளார்.
அமைச்சர் கோபால் ராய்
அமைச்சர் கோபால் ராய்pt web
Published on

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், ஹரியானா, உ.பி., மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் போக்குவரத்து அமைச்சர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தங்கள் மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் டீசல் பேருந்துகள் நுழைவதை தடை செய்யுமாறு கோரியுள்ளார்.

மேலும், “நடப்பு குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவு குறித்து எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்க எழுதுகிறேன். இந்த காற்று மாசுபாட்டின் ஒரு முக்கிய அங்கம், ராஜஸ்தானில் இருந்து நகருக்குள் நுழையும் கணிசமான எண்ணிக்கையிலான டீசல் பேருந்துகளின் வாகன உமிழ்வுகள் காரணமாகும்.

இதுபோன்ற பேருந்துகளின் அதிக எண்ணிக்கை என்பது டெல்லியில் காற்றின் தரம் மோசமடைவதற்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கிறது. இது கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் சுவாச நோய்கள் மற்றும் பிற உடல் நல குறைபாடுகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்லி ஏற்கனவே மோசமான காற்றின் தரத்துடன் போராடி வருகிறது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தின் இந்த கூடுதல் சுமை நிலைமையை மோசமாக்குகிறது.

எனவே தங்கள் மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் டீசல் பேருந்துகளை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அவற்றின் உமிழ்வு விதிமுறைகளைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு சி என் ஜி அல்லது மின்சார பேருந்துகளுக்கு மாறுதல் போன்ற பயனுள்ள தீர்வுகளை ஒன்றாக செயல்படுத்தலாம்.

அமைச்சர் கோபால் ராய்
"மனவேதனை அளிக்கிறது"- தவெக நிர்வாகி சரவணன் மறைவுக்கு விஜய் இரங்கல்

இதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும், டெல்லியில் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்கும் கூட்டாக செயல்பட முடியும். சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார மேம்பாட்டிற்காக இந்த கோரிக்கை உரிய பரிசீலனை செய்யப்படும் என நம்புகிறேன். இந்த முக்கியமான பிரச்னையில் தங்கள் அரசாங்கத்தின் நேர்மறையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கோபால் ராய்
மாமல்லபுரம் காவலாளியை தாக்கிய விவகாரம்: வீடியோ வைரலான நிலையில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com