தேர்தலுக்கு முன், தான் உட்பட மேலும் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பாஜகவில் இணைய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த கட்சியின் அழைப்பை ஏற்காததால் அடுத்த இரண்டு மாதங்களில் நான் உட்பட சௌரப் பரத்வாஜ், ராகவ் சதா மற்றும் துர்கேஷ் பதக் ஆகியோரை கைது செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தபோதிலும், ஆம் ஆத்மி கட்சியினர் வலிமையுடன் இருக்கின்றனர். இதனால், கட்சியின் அடுத்தகட்ட தலைவர்களை சிறையில் அடைக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை பெற்றுள்ளதால், அவர் ராஜினாமா செய்ய எந்த காரணமும் இல்லை” என கூறினார்.