பழைய ஆல்டோ காரை ஓட்டி வந்த நபரிடம் 144கிமீ வேகத்தில் பயணம் செய்ததாகக் கூறி டெல்லி போலீசார் அபராதம் வசூல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், 9 வருடங்கள் பழைய ஆல்டோ காரை ஓட்டி வந்துள்ளார். அவரை மறித்து சோதனை செய்த போலீசார் அவரிடம் ரூ.2ஆயிரத்துக்கான அபராத ரசீதை கொடுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர், தான் மீறிய விதிமீறல் என்னவென்று கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் 144கிமீ வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கொடுத்த ரசீதில் இருந்த கார் வேறு, ஆனால் குறிப்பிட்டப்பட்டிருந்த வாகன எண் தன்னுடையது என குழம்பி போன அந்த நபர் சமூக வலைதளத்தில் இது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் ''அன்புள்ள உத்திரப்பிரதேச காவல்துறைக்கு, நான் ஓட்டி வந்தது ஆல்டோ கார். நீங்கள் வேறு ஒரு காரினை குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் வாகன எண் என்னுடைய காரின் எண்ணாகவே இருக்கிறது. நீங்கள் என்னுடைய 9 வருட பழைய ஆல்டோ காரை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை 144கிமீ வேகத்தில் ஓட்டிக்காட்டுங்கள். அதை நீங்கள் செய்துவிட்டால், நான் உங்களுக்கு ரூ.2 லட்சம் தருகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவுடன் போலீசார் கொடுத்த ரசீதையும் இணைத்துள்ளார். டெல்லி நபரின் இந்த வித்தியாசமான குற்றச்சாட்டு பலரும் நகைச்சுவையாகவும், சீரியசாகவும் பதில் அளித்து வருகின்றனர்