டெல்லி| மனைவி திருநங்கையா? மருத்துவப் பரிசோதனைக்காக நீதிமன்றத்தை நாடிய கணவர்! நீதிபதி சொன்ன கருத்து

தனது மனைவிக்கு அரசு மருத்துவமனையில், பரிசோதனைசெய்து பாலினத்தை உறுதிப்படுத்துமாறு நபர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி உயர்நீதிமன்றம்எக்ஸ் தளம்
Published on

டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியை திருநங்கை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர், ”திருமணத்துக்கு முன்பு பாலின மாறுபாடு குறித்து எதுவும் கூறவில்லை. அவர், என்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரது பாலின மாறுபாடு குறித்து மறைத்தது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவர், திருமணத்துக்குப் பிறகு எனக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆகவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த வழக்கறிஞர் அபிஷேக் குமார் செளதரி, ''தனிநபரின் பாலினம் அல்லது பாலின அடையாளம் என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனினும், திருமணம் என்று வரும்போது இருவரும் ஒவ்வொருவரைப் பற்றி தெரிந்துகொள்வது அவர்களின் உரிமை. ஆரோக்கியமான மற்றும் அமைதியான திருமண வாழ்க்கையை உறுதிப்படுத்தும், இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின்கீழ் இரு தனிநபர்களின் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகளை சமநிலைப்படுத்துவதும், மதிப்பதும் முக்கியம்'' எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய பரிசோதனை மூலம் உண்மையை அறிந்துகொள்வது மனுதாரரின் அடிப்படை உரிமை எனக் குறிப்பிட்டது. பரிசோதனையில், மனைவி, பெண் எனத் தகுதி பெறவில்லை என்றால், மனுதாரர் பராமரிப்பு செலவை அளிக்கவோ அல்லது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை சட்டங்களின்கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவோ ​​தேவையில்லை என வலியுறுத்தி உள்ளது.

இதையும் படிக்க: அடேங்கப்பா! குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலியாய் இயங்கிய நீதிமன்றம்.. ஏமாந்த நபர்கள்.. ஷாக் ஆன போலீசார்!

டெல்லி உயர்நீதிமன்றம்
பீகார் | காவலர் தேர்வில் வெற்றி பெற்று சப் இன்ஸ்பெக்டரான திருநங்கை... முன்னோடியாக திகழும் தமிழ்நாடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com