ஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி 

ஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி 
ஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி 
Published on

ஒரு வருடத்துக்குள் டெல்லியின் முன்னாள் முதல்வர்கள் 3 பேர் மறைந்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குரானா கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்தவர். 2004-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த குரானா, நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி காலமானார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்ஷித் கடந்த மாதம் 20ம் தேதி காலமானார். உடல் நிலை பிரச்னை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். 1998 முதல் 2013 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் டெல்லியின் முதல்வராக இருந்தவர் ஷீலா தீக்ஷித். 

டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக பதவி வகித்தவர் சுஷ்மா சுவராஜ். 67 வயதான இவருக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com