மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கியது. இதையடுத்து அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கெஜ்ரிவாலின் பிணையை ரத்து செய்தது.
இதனை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என தெரிவித்தது. அதேசமயம் இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கலாம் என நீதிபதிகள் கூறினர். இந்நிலையில், கெஜ்ரிவாலின் பிணை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
கெஜ்ரிவாலுக்கு பிணை கிடைக்குமா, அவர் சிறையில் இருந்து வெளியே வருவாரா என ஆம் ஆத்மி தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.