''எங்களுக்கு மட்டும் மத்திய அரசு குறைவான ஆக்சிஜன் தருவது ஏன்?" - டெல்லி அரசு கேள்வி

''எங்களுக்கு மட்டும் மத்திய அரசு குறைவான ஆக்சிஜன் தருவது ஏன்?" - டெல்லி அரசு கேள்வி
''எங்களுக்கு மட்டும் மத்திய அரசு  குறைவான ஆக்சிஜன் தருவது ஏன்?" - டெல்லி அரசு கேள்வி
Published on

'மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா போன்ற பல மாநிலங்களுக்கு, அவர்களின் கேட்ட முழு அளவு மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்த மத்திய அரசு, டெல்லிக்கு மட்டும், நாங்கள் கேட்டதை விடவும் குறைவான அளவு ஆக்சிஜன் கொடுத்திருப்பது ஏன்?' என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு இன்று கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக, கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை டெல்லியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 300க்கும் மேற்பட்ட மரணங்கள், டெல்லி அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இது இன்னும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

குவியும் சடலங்களை மயானங்களில் எரிப்பதற்கு இடமில்லாமல், சடலங்களுக்கு டோக்கன் விநியோகிக்கின்றனர் ஊழியர்கள். இதில் உச்சகட்டமாக, இன்றைய தினம் சடலங்களை எரிக்க உதவிய விறகுகளுக்கும் டெல்லியில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இவ்வளவு மோசமான பாதிப்புகளை சந்தித்து வரும் நேரத்தில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு சார்பில் `மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா உட்பட பல மாநிலங்களுக்கு, அவர்கள் கேட்ட அளவுக்கான மருத்துவ ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. டெல்லிக்கு மட்டும், நாங்கள் கேட்கும் அளவு கிடைக்காமல் இருக்கிறது. ' என இன்றைய தினம் புகார் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாருக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், ஏன் என்ற விளக்கத்தை தருமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எதுவாகினும், மத்திய அரசு விரைந்து மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

`இப்போதிலிருந்தே எந்த மாநிலத்துக்கு என்னென்ன பொருள்கள் எவ்வளவு தரப்படுகின்றன என்ற தரவுகளை மத்திய அரசு தயாரித்து, அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள்மீது நம்பிக்கை வரும். வரும் நாள்களில் 'ரெம்டெசிவர்' மருந்துக்கான விநியோகம் அதிகரிக்கும்போது, அப்போதும் எங்களுக்கு தேவையான அளவு முழுமையாக தரப்படுமா இல்லையா எனத் தெரியவில்லை. ’ என்றும் டெல்லி அரசு குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com