டெல்லியில் வீட்டுக்கே வரும் வெங்காயம் ! மாநில அரசின் திட்டம்

டெல்லியில் வீட்டுக்கே வரும் வெங்காயம் ! மாநில அரசின் திட்டம்
டெல்லியில் வீட்டுக்கே வரும் வெங்காயம் ! மாநில அரசின் திட்டம்
Published on

டெல்லியில் 1 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், வீட்டிற்கே சென்று வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.

ஒரு கிலோ வெங்காயம் உத்தரகாண்ட்டில் 60 ரூபாய்க்கும், ஒடிசா, மகாராஷ்ட்ராவில் 70 ரூபாய்க்கும், மத்திய பிரதேசத்தில் 80 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், டெல்லியில் 100 ரூபாயை எட்டியுள்ளது. இதனால், கிலோ 32 ரூபாய் என ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ வெங்காயம் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் மூலம் வீட்டிற்கே சென்று வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நடமாடும் வேன்கள் மூலமும், ஆவின் உள்ளிட்ட சில்லறை அங்காடிகள் மூலமும் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பனையை செய்யும் திட்டத்தையும் டெல்லி அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே, வெங்காய விலையை கட்டுபடுத்த இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள மத்திய அரசு, இறக்குமதியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அடுத்த சில நாட்களில் வெங்காயம் வரத்து அதிகரிக்கும் என்பதால், அதன் விலை குறையத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com