டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 13-ஆம் தேதி, உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதிக்கு வந்திருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்து டெல்லி செல்வதற்காக மறுநாள் அங்கிருந்த பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த 3 நபர்கள், பிஜ்னோர் நகரப்பகுதியில் இறக்கி விடுவதாக நம்ப வைத்து, அந்த இளம்பெண்ணை காரில் ஏற்றியுள்ளனர். அப்போது மூவரும் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வழியிலேயே இறக்கிவிட்டனர்.