பட்டாசு வெடிக்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளபோதிலும் தீபாவளியன்று டெல்லியில் காற்றின் மாசு அளவு அதிகமாக பதிவாகியுள்து.
சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி நாளில் சென்னை நகரில் காற்றின் மாசு அளவு குறைவாக பதிவாகியிருப்பதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
Read Also -> விவாகரத்து கோரிய லாலு பிரசாத் மகனை காணவில்லை!
பட்டாசு வெடிக்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளபோதிலும் தீபாவளியன்று டெல்லியில் காற்றின் மாசு அளவு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது டெல்லியின் பல இடங்களில் காற்றின் மாசு அளவு 999 என்ற குறியீட்டை எட்டியுள்ளது. இது மிகவும் அபாயகரமான ஒன்றாகும். இரண்டும் மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை தான் பயன்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை டெல்லி வாசிகள் துளியும் மதிக்காமல் இரவு முழுக்க வெடி வெடித்துள்ளனர். இதுவும் காற்றின் மாசு அதிகரிக்க காரணமாக சொல்லப்படுகிறது.