டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியது. காலையில் கடும் குளிர் நிலவியதால் வாக்குப்பதிவு நீண்டநேரம் மந்தமாகவே இருந்தது. பிற்பகலில் வாக்குப்பதிவின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாள் முழுவதுமே வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது. மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் மட்டுமே பதிவாகின.
இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ஆம் ஆத்மி அதிக இடங்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை பாஜக பிடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சொற்பமான இடங்களை பிடிப்பதே கடினம் என்ற நிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.
டைம்ஸ் நவ்:
ஆம் ஆத்மி - 44
பாஜக - 26
காங்கிரஸ் -0
மற்றவை - 0
ரிபப்ளிக்:
ஆம் ஆத்மி - 48-61
பாஜக - 9-21
காங்கிரஸ் - 0-1
மற்றவை - 0
நியூஸ் எக்ஸ் - நேத்தா
ஆம் ஆத்மி - 53-57
பாஜக - 11-17
காங்கிரஸ் - 0-2
மற்றவை - 0