டெல்லி ஜஹாங்கீர் புரியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியை டெல்லி காவல்துறை தடுக்க முழுமையாக தவறிவிட்டதாக டெல்லி நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தெற்கு டெல்லியின் ஜகங்கிற்புறி பகுதியில் இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்களான மசூதியின் முன்பாக சிலர் அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சி என்ற பெயரில் ஒலிபெருக்கிகளை கொண்டு சத்தமாக பாடல்களை இசைப்பது, அங்கு இருக்கக்கூடிய பொருட்களை சேதம் செய்ய முயன்றது, மசூதிக்குள் அத்துமீறி நுழைய முயன்றது போன்றவற்றில் ஈடுபட்டனர். இதற்கு அங்கிருந்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பதிவு செய்யவே சிறு கைகலப்பு பின்னர் பெரும் வன்முறையாக மாறியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி ரோகினி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது வழக்கு விசாரணையின்போது டெல்லி காவல்துறையினர் கடுமையாக சாடிய நீதிபதிகள், நிலைமையை சரியாக கையாளாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் காவல்துறையின் உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதிலளித்த டெல்லி காவல்துறை மத ஊர்வலத்தை கலைக்க நடவடிக்கை இரக்கும் பட்சத்தில் அது பெரும் வன்முறையாக வாழும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.