சமூக ஊடகங்கள் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவரை குபேரன் ஆக்கிவிடும். அதே சமயத்தில் உச்சத்தில் இருப்பவரை படு பாதாளத்தில் தள்ளிவிடும்.
இதனை எடுத்துக்காட்டும் விதமாக, டெல்லியில் வடைபாவ் விற்ற ஒரு பெண் சமூக ஊடகத்தின் உதவியால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனது மட்டுமன்றி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துக்கொள்ளும் வரை அவரை உயர்த்தியுள்ளது. அத்தோடு நிற்காமல் இவரின் ரசிகர் ஒருவர் அவரை தனது மானசீக குருவாக நினைத்து, இவரின் முகத்தை தனது கையில் பச்சைக்குத்திக்கொண்டுள்ளார்.
இவர் பச்சைக்குத்திக்கொண்டுள்ள வைரல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. யார் கண்டது.... அடுத்ததாக இவரும் சமூகவலைதளத்தில் பிரபலமாகலாம். யார் அது எங்கு நடந்தது என்பதை பார்க்கலாம்.
டெல்லியைச்சேர்ந்த சந்திரிகா கெராதீட்சித் என்ற பெண் அப்பகுதியில் இருக்கும் சைனிக் விஹார் என்ற இடத்தில் வடாபாவ் ஸ்டால் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இவர் சமூக வலைதளங்களில் ஆட்டிவாக இருப்பவர். ஆததால், தான் விற்பனை செய்யும் வடாபாவ் மற்றும் மக்களுடன் இவர் பேசும் உரையாடல்களை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இவர் வெளியிடும் வீடியோக்கள் மக்கள் மத்தில் நல்ல வறவேற்பைப்பெற்றதுடன், பல மில்லியன்கள் ஃபாலோயர்ஸ்ஸை பெற்று தந்திருக்கிறது.
மிக குறுகிய காலத்திற்குள் சமூகவலைதளத்தில் தான் வெளியிடும் வீடியோக்கள் மூலமாக இப்பெண் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்.
இந்நிலையில், இவரின் ரசிகர் ஒருவர், இவரை மானசீக குருவாக ஏற்று, இவரின் முகத்தை தனது கையில் பச்சைக்குத்திக்கொண்டுள்ளார்.
இவர் பச்சைக்குத்திக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த ரசிகர், குருவின் வழி எவ்வழியோ அவ்வழியே எனக்கும் என்ற ரீதியில் தானும் ஒரு வடாபாவ் கடை திறக்கப்போவதாக அறிவித்துள்ளாராம்.
இந்த வீடியோவிற்கு பல பேர் பலவித கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் இதற்குதான் ஒவ்வொருத்தரும் படித்துஇருக்க வேண்டும் என்றும், படிப்பறிவு இருந்தால் இது போல் இருக்கமாட்டார்கள் என்றும் பலவித கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அனில் கபூர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவின் (பிக்பாஸ்) மூன்றாவது சீசன் ஜூன் 21ம் தேதி ஜியோசினிமாவில் ஸ்ட்ரீமிங்கில் தொடங்கியது. இதில் ஒரு போட்டியாளராக சந்திரிகா கலந்துக்கொண்டிருக்கிறார். அதில் அவர் வடை பாவ் விற்றதன்மூலம் ஒரு நாளைக்கு 40000 ரூபாய் சம்பாதித்ததாக கூறியுள்ளார்.
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னதாக அவர் தொலைகாட்சி வாயிலாக மக்களிடையே பேசும் பொழுது, “பெரும்பாலான மக்கள் தங்களின் போராட்டங்கள், கதைகள் பற்றி அறிந்துக்கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கையைப்பற்றி தெரிந்துக்கொண்டு அதற்கு கருத்து தெரிவிக்கின்றனர். இது மிகவும் வேடிக்கையானது. என்னைப்பற்றி எதுவும் தெரியாமல் மக்கள் நான் இப்படிதான் என்று புரிந்துக்கொள்வது எனக்கு வேடிக்கையாக உள்ளது. ஒருவரைப்பற்றி சரியாகத் தெரிந்துக்கொள்ளாமல் நீங்கள் யாருக்காகவும் அதைச் செய்ய முடியாது” என்று கூறியுள்ளதாக பிரபல பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.