போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் அபராத வாகன நிறுத்துமிடங்களை அமைக்க டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்தங்களைக் கட்டுப்படுத்த அபராத வாகன நிறுத்துமிடங்களை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. நெரிசல் மிகுந்த பகுதிகளில் 200 அடி அகல சாலை தேர்வு செய்யப்பட்டு, அபராத வாகன நிறுத்துமிடமாக அறிவிக்கப்படும்.
இங்கு, ஒரு மணி நேரம் முதல் நாள் முழுவதும் வாகனங்களை நிறுத்தலாம். இந்த இடங்களில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் 50 முதல் 500 ரூபாய் வரையிலும், கார்களுக்கு 100 முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும் அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.