17 ஓபிசி வகுப்பினர் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பு - சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்

17 ஓபிசி வகுப்பினர் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பு - சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்
17 ஓபிசி வகுப்பினர் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பு - சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்
Published on

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 17 ஓபிசி வகுப்பினரை பட்டியலின பிரிவில் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரப் பிரதேசத்தில் உள்ள நிஷாத், பிண்ட், மல்லா, கேவத், காஷ்யப், பார், திவார், பாதம், மசுவா, பிரஜபதி, ராஜ்பார், காஹர், பொட்டார், திமர், மன்ஜி, துஹஹா மற்றும் கவுர் ஆகிய 17 பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவைச் சேர்ந்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கடந்த வெள்ளிக்கிழமை அம்மாநில அரசு முடிவெடித்தது. இந்த ஓபிசி குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சாதிச் சான்றிதழை மாற்றி வழங்க அதிகாரிகளுக்கு வலியுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அந்தப் பிரிவு மக்களுக்கு எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு கிடைக்க செய்யும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஓபிசி பிரிவில் இருப்பவர்களை எஸ்.சி பட்டியலுக்கு மாற்ற யோகி ஆதித்யநாத் எடுத்த இந்த முடிவுக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியது, இந்த முடிவு சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றத்தில் எதிர்த்து முறையிடப்படும் என்று மத்திய சமூக நீதித்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எஸ்.சி பட்டியலில் எவ்வித மாற்றம் செய்யவேண்டும் என்றாலும் நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டே செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், எந்தவொரு சமுதாய பிரிவினர் சமுதாய, கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருந்து, காலம் காலமாக தீண்டாமையை அனுபவிக்கிறார்களோ அவர்களைதான் எஸ்.சி பட்டியலில் சேர்க்க முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்பாக, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்சியிலும் இதேபோல், ஓபிசி பட்டியலில் உள்ள சில பிரிவினரை எஸ்.சி பட்டியலில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்றனர். ஆனால், அப்போதும், நீதிமன்றம் தலையிட்டு அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com