ராஜஸ்தான் மாநிலத்தில் பந்தல் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் கோவில் நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்காக இரும்பு கம்பிகளைக் கொண்ட மிகப்பெரிய பந்தல்கள் அமைக் கப்பட்டிருந்தன. இந்நிலையில், மாலை 5 மணியளவில் பந்தலின் ஒருபகுதி திடீரென்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இரும்பு உத்திரங்கள் விழுந்ததில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 15 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.