கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெண்கள் வேலை காரணமாக வெளியூர் செல்வது 101% அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிப்பு மற்றும் வேலைக்காக வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என இந்தியாஸ்பேண்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், இதேபோல் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் ஆண்களின் எண்ணிக்கை 48.7 சதவிகிமாக உள்ளது. ஆண்கள் வளர்ச்சி விகிதத்தை பெண்களின் விகிதம் விட இரு மடங்கு அதிகம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் வெளியூருக்கு மாற்றலாகி செல்வதற்கு திருமணம் ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது. இது தவிர மேற்படிப்புக்காககும் வேலைக்காகவும் பெண்கள் வெளியூர் செல்லும் எண்ணிகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் பொருளாதார சூழலைக் கருத்தில்கொண்டு, கடுமையான நகரப்புற சூழலில் பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது திருமணத்திற்குப் பிறகும் கூட சில
பெண்கள் வேலைக்காக வெளியூர் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.