45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!

45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
Published on

விதிமுறைகளை சரியாக பின்பற்ற வில்லை என கடந்த பிப்ரவரியில் என்.எஸ்.இ.யின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா , எஸ்.எஸ்.இ நிறுவனம் உள்ளிட்ட பலருக்கும் செபி அபராதம் விதித்தது. ஆனந்த் சுப்ரமணியன் நியமனம், முக்கியமான தகவல்களை அடையாளம் தெரியாத நபரிடம் பகிர்ந்துகொள்வது மற்றும் நிர்வாக முறைகேடு காரணமாக பிப்ரவரியில் 3 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது,. தற்போது `டார்க் பைபர்’ வழக்கில் செபி மீண்டும் ரூ.5 கோடி அளவுக்கு சித்ராவுக்கு அபராதம் விதித்திருக்கிறது.

18 அமைப்புகளுக்கு மொத்தம் 44 கோடி ரூபாய் அளவுக்கு என்.எஸ்.இ அபராதம் விதித்திருக்கிறது. என்.எஸ்.இ. நிறுவனத்துக்கு ஏழு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியனுக்கு ஐந்து கோடி ரூபாயும், தற்போதைய தலைமை பிஸினஸ் மேம்பாட்டு அதிகாரி ரவி வாரணாசிக்கு ரூ.5 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

டார்க் பைபர் என்பது குறிப்பட்ட புரோக்கர்களுக்கு மட்டுமே பிரத்யேக வேகத்தில் இணையதள வசதி கொடுக்கப்பட்டது. அதாவது சில முதலீட்டாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. அதனால் விலையில் சலுகைகள் கிடைத்தன. மற்றவர்களுக்கு பாதகமாக அமைந்தது. இது தொடர்பாக 2015-ம் ஆண்டு அக்டோபரில் செபிக்கு புகார் வந்தது. அந்த புகார் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த இணையதள வசதியை சம்பர்க் இன்ஃபோடெயின்மெண்ட் என்னும் நிறுவனம் வழங்கியது. இந்த நிறுவனத்துக்கு ரூ. 3 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை இரு புரோக்கிங் நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தியுள்ள. அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. வே2வெல்த்க்கு ரூ.6 கோடியும் மற்றொரு நிறுவனமான ஜிகேஎன் செக்யூரெட்டீஸ் நிறுவனத்துக்கு ரூ.5 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறைகேட்டில் என்.எஸ்.இ பணியாளர்கள் மற்றும் சம்பர்க் நிறுவனத்தின் பணியாளர்களும் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவதாக செபி அறிவித்திருக்கிறது. இந்த தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் தன்னுடைய 186 பக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விஷயம் தனக்கு தெரியாது என சித்ரா ராமகிருஷ்ணா வாதாடி இருக்கிறார். ஆனால் ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு தினசரி விஷயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதை ஏற்க முடியாது என்று செபி மறுத்திருக்கிறது. மேலும் தலைமைச் செயல் அதிகாரியின் பொறுப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com