டார்ஜிலிங் பொம்மை ரயில் மீண்டும் இயங்கவுள்ளது

டார்ஜிலிங் பொம்மை ரயில் மீண்டும் இயங்கவுள்ளது
டார்ஜிலிங் பொம்மை ரயில் மீண்டும் இயங்கவுள்ளது
Published on


டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில் மூன்று மாதத்திற்கு பிறகு தனது சேவையை தொடங்கவுள்ளது.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே நிர்வாகம், பொம்மை ரயில் சேவையை ஜலப்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையே, சோதனை முறையில் இயக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்குவங்க மாநிலத்தில் கூர்க்கா சமூகத்தினர் தனிமாநில உரிமை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த பொம்மை ரயில் சேவையை சோதனை முறையில் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஜலப்பைகுரி மற்றும் டார்ஜிலிங் ரயில் தடத்தில் பல்வேறு துறையினர் ஆய்வு செய்யவுள்ளதாகவும் இந்த தடத்தில் ரயிலை இயக்க அனுமதித்தால் அக்டோபர் 25ஆம் தேதிக்கு பின்னர் ரயில் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மலை ரயில் 1881 ஆம் ஆண்டு முதல் தனது சேவையை வழங்கி வருகிறது. டார்ஜிலிங் ஹிமாலயன் ரயிலை, உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக 1999-ஆம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பு அறிவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com