டெல்லி பல்கலை.யில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக நீக்கம்

டெல்லி பல்கலை.யில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக நீக்கம்
டெல்லி பல்கலை.யில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக நீக்கம்
Published on
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைக்கான பாடப்பிரிவில் பிரபல வங்காள எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், இவர்களின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கிலத் துறையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத் துறையின் பாடப்பிரிவில் இருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com