மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நூலகக் கட்டடத்தில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 48.81 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51 ஓய்வூதியதாரர்களும் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஐஐடி சட்டதிருத்த மசோதாவுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் பொதுத்துறை, தனியார் பங்களிப்புடன் ஐஐடி கல்விநிறுவனங்களை நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.