இன்று மாலை உருவாகிறது ஆம்பன் புயல்: எங்கு கரையைக் கடக்க வாய்ப்பு?

இன்று மாலை உருவாகிறது ஆம்பன் புயல்: எங்கு கரையைக் கடக்க வாய்ப்பு?
இன்று  மாலை உருவாகிறது ஆம்பன் புயல்: எங்கு கரையைக் கடக்க வாய்ப்பு?
Published on

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்க கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறியுள்ளது. இன்று மாலை புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ஆம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும். பின்னர் திசையை மாற்றி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். 20-ஆம் தேதி மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

முன்னதாக இது குறித்து விடுக்கப்பட்ட செய்தியின்படி, இதனால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பு காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு குமரி கடல், தென் கிழக்கு அரபி கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொருத்தவரை நேரடியாக மழை இருக்காது என்றும், புயல் விலகி செல்வதால் வரும் நாட்களில் தமிழகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர உள்ளது எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com