வங்கக் கடலில் உருவாகிய Amphan புயல் மேற்கு வங்கம் - வங்க தேசம் இடையே கரையைக் கடந்தது.
வங்கக்கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த Amphan புயல் இன்று வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. பின்னர் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 2.30 மணிக்கு திஹா - சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, தற்போது கரையைக் கடந்திருக்கிறது.
இந்தப்புயலால் கொல்கத்தா கடும் சூறாவளிக் காற்று வீசியது. மணிக்கு 170 கிலோமீட்டருக்கு மேலாகக் காற்று வீசியதால் ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப்புயலால் மேற்கு வங்கத்தில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.