அலுவலக சீனியர் பெயரில் பேக் ஐடி.. அதன் மூலம் பண மோசடி - டெல்லி சம்பவம்!

அலுவலக சீனியர் பெயரில் பேக் ஐடி.. அதன் மூலம் பண மோசடி - டெல்லி சம்பவம்!
அலுவலக சீனியர் பெயரில் பேக் ஐடி.. அதன் மூலம் பண மோசடி - டெல்லி சம்பவம்!
Published on

ஃபேஸ்புக்கில் பேக் ஐடி உருவாக்கி அதன் மூலம் பணமோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு அவரின் அலுவலக நண்பர் பெயரில் ஃபேஸ்புக்கில் அழைப்பு வந்துள்ளது. தன்னுடைய அலுவலகத்தைச் சேர்ந்தவர்தானே என அவரும் நட்பில் இணைத்துள்ளார். பின்னர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை உடனடியாக ரூ.60ஆயிரம் வேண்டுமென ஃபேஸ்புக் மூலம் கேட்டுள்ளார். பணத்தை அனுப்ப வேண்டிய பேடிஎம் எண்ணையும் அனுப்பியுள்ளார். இதனால் ரூ.58ஆயிரத்தை பணத்தையும் அவருக்கு அனுப்பி வைத்துள்ளார் சம்பந்தப்பட்ட நபர். சில மணி நேரங்கள் கழித்து பணம் கொடுத்த நபர் தன்னுடைய அலுவலக நண்பருக்கு தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு மனைவி உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். எதிர்முனையில் பேசிய நண்பரோ மனைவிக்கு ஒன்றுமில்லையே எனத் தெரிவித்துள்ளார்.

அப்போது பேக் ஐடியால் தான் ஏமாந்தது அவருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு ரவிகுமார் என்பவரை கைது செய்துள்ளனர். செல்போன் ரிப்பேர் கடை வைத்திருக்கும் இவருக்கும், ஒஎல்எக்ஸ், பேடிஎம் மூலம் மோசடி செய்யும் கன்கையா என்ற நபருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ரவிகுமார் தனது கடை மூலம் சிம் கார்டுகளுக்கு ஏற்பாடு செய்து அதனை மோசடிக்கு பயன்படுத்துவார்.

இவர்களுடன் கலித் என்ற நபரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மோசடி பணத்தை ஊரிலுள்ள சில இளைஞர்களின் பேடிஎம் செயலியில் அனுப்பி வைத்துவிட்டு, பின்னர் அவர்களை அழைத்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்து விடுவதும் இவர்களின் வழக்கமாக உள்ளது. தற்போது ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com