தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், இந்நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு, சென்னை மணலி பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், எரிபொருளில் கந்தகத்தை நீக்குதல் பிரிவு ஆகியவற்றை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, நாகையில் அமையவிருக்கும் காவிரிப்படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, சமூக பொருளாதார பயன்கள் அதிகரித்து, தற்சார்பு நிலையை நோக்கி நாடு நடைபோட முடியும் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநர், முதல்வர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.