காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியை சேர்ந்த 24வயது இளம்பெண் ஒருவர் சிஆர்பிஎப் வீரர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “மார்ச் 10ஆம் தேதி எனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தேன் .அப்போது தவறுதலாக வழிமாறி சென்றுவிட்டேன். அப்போது காரில் வந்த மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் என்னை வழிமறித்து எனக்கு உதவுவதாக கூறினர். அவர்கள் பேச்சை நம்பி அவர்களுடன் சென்றேன். ஆனால் அவர்கள் என்னை முகாமுக்கு அழைத்து சென்று சிறை வைத்தனர். பின்னர் அதில் ஒரு வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனை உடனிருந்த வீரர்கள் செல்போனில் படம் பிடித்தனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
இளம்பெண் அளித்த புகாரை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று வீரர்களும் பணி இடை நிக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய விசாரணை அதிகாரிகள், “மூன்று வீரர்களிடம் முதற்கட்டமாக விசாரணை நடைப்பெற்றுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் காவல்துறைக்கு சிஆர்பிஎப் முழுஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மார்ச் 10ஆம் தேதி மாலை இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது. புகார் தெரிவித்த பெண் மற்றும் 3 வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானதை அடுத்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினர்.