வடமாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் திடீரென நூற்றுக்கணக்கான காகங்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளன. பறவைக் காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காகங்கள் உயிரிழப்பு எதிரொலியால் பூங்காக்கள், பறவைகள் சரணாலயத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கால்நடை துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.