எல்லை தாண்டிய ஊடுருவல் கணிசமாக குறைவு - விளக்கம் கொடுத்த மத்திய அரசு

எல்லை தாண்டிய ஊடுருவல் கணிசமாக குறைவு - விளக்கம் கொடுத்த மத்திய அரசு
எல்லை தாண்டிய ஊடுருவல் கணிசமாக குறைவு - விளக்கம் கொடுத்த மத்திய அரசு
Published on

இந்திய எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால், எல்லை தாண்டிய ஊடுருவல்கள் பெருமளவு குறைந்து உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய் இன்று பதிளித்தார். அதில், "இந்திய எல்லைகளில் ஊடுருவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட வேலிகளை அமைத்தல், உளவுத்துறை அமைப்புகளின் செயல்பாடுகளை அதிகரித்தல், அதிநவீன ஆயுதங்களுடன் ராணுவ வீரர்களை பணியில் நிறுவுதல் மற்றும் ஊடுருவலை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 2017-ம் ஆண்டு முதல் ஜம்மு - காஷ்மீரில் எல்லை தாண்டிய ஊடுருவல் என்பது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி, 2017-ம் ஆண்டு 136 ஊடுருவல்கள் நிகழ்ந்த நிலையில் 2018-ம் ஆண்டு அது 143-ஆகவும், 2019-ம் ஆண்டு 138 ஆகவும், 2020-ம் ஆண்டு 51 ஆகவும் குறைந்துள்ளது. இதேபோல், 2021-ம் ஆண்டில் 34 ஊடுருவல்கள் மட்டுமே நடந்துள்ளது" என நித்தியானந்தா ராய் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com