இந்தியாவில், அதிக வருமான பிரிவுகளில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பெருமளவில் உருவாகி வருகின்றனர். இதில், ஆண்டு வருமானமாக ரூ.500 கோடி ரூபாய்க்கு மேல் பெறும் 23 பேரில் யாரும் சம்பளம் பெறுபவர்கள் இல்லை. அதேசமயம், ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி ரூபாய் பிரிவில் உள்ள 262 பேரில் 19 பேர் சம்பளதாரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013-14-ஆம் ஆண்டில், ஒருவர் மட்டுமே ரூ.500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவராக இருந்தார். அதேசமயம், 2 பேர் ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி ரூபாய் பிரிவில் இருந்தனர். 25 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2022-23-ஆம் ஆண்டில் 1,812-லிருந்து கடந்த மதிப்பீட்டு ஆண்டில் 1,798 ஆகக் குறைந்துள்ளது.
அந்த வகையில், 1 கோடி ரூபாய்க்கு மேல் வரிவருமானமாக பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2013-14-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் 44,078 நபராக இருந்த இதன் எண்ணிக்கை, 2023-24-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2.3 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 5 மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த காலகட்டத்தில், தாக்கல் செய்யப்பட்ட ITR-கள் 3.3 கோடி ரூபாயிலிருந்து 7.5 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளதாக வரித் துறையின் சமீபத்திய தரவுகள் தெரிவிகின்றன. அந்த வகையில், ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2022-2023-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் 49.2 சதவீதமாக இருந்தது. மேலும், ரூ.1 கோடி முதல் ரூ. 5 கோடி ரூபாய் வருமான பிரிவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை 53 சதவீதமாக உள்ளது.