10 காங். எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவல்? - கோவா பரபரப்பு

10 காங். எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவல்? - கோவா பரபரப்பு

10 காங். எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவல்? - கோவா பரபரப்பு
Published on

கோவா மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய போதிலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து மற்ற கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. தற்போது முதலமைச்சராக பிரமோத் சவந்த் உள்ளார்.

இந்நிலையில் கோவாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கோவாவில் பாஜகவின் பலம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருவதால் அங்கு உச்சகட்ட அரசியல் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் கோவா அரசியலிலும் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com